வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவுல – நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, மூன்று அடி நீளமான (டெட்டனேட்டர்) உடனான சிவப்பு நிற 5 நூல்கள், 8 அங்குல நீளமான வோட்டர் ஜெல்கள் மூன்றும், வானே முள் மற்றும் 50 மீட்டர் நீளமுள்ள கம்பி ரோல் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று (18) அதிகாலை 3 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், நாவுலவில் இருந்து நிகுல நோக்கி சென்ற முச்சக்கரவண்டியை சோதனையிட்ட போது வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாவுல, புஸ்ஸல்லாவ, உடதலவின்ன மற்றும் வத்தேகம பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 50, 49, 38 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (18) நாவுல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.