டுபாயில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் பிரதான சீடன் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தேடும் நடவடிக்கையின் போது கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட அதிகாரிகள் குழுவினால் அவர் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஆண்டியம்பலத்தில் உள்ள ‘பிக் சிட்டி’ குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த 30 வயது இளைஞர் ஆவார்.
அவரை கைது செய்த போது, அவரிடம் இருந்து 200 மில்லிகிராம் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவர் இன்று (18) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.