இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரங்களில் இதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி அடுத்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக இந்தியப் பிரதமர் வரும் 21ஆம் திகதி அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளார்.