இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் 3 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரத்தை அண்மித்த கடற்பகுதியில் வைத்து மேற்படி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா கடற்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல்படையினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் யாழ்ப்பாணத்தின் கொழும்புத்துறை மற்றும் தாழையடி – உடுத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34, 37 மற்றும் 44 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மண்டபத்திலுள்ள தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.