ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பிரேரணை அடங்கும் “மலையக சாசனம்” வெளியீட்டு நிகழ்வு நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது நேற்று (17) மாலை நுவரெலியா நட்சத்திர தனியார் விருந்தகத்தில் நடைபெற்றது.
மலையக சாசன வெளியீட்டு நிகழ்வில் பேராசிரியர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள், சிவில் அமைப்பினர், வர்த்தகர்கள், துறைசார் ஆர்வலர்கள், துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.