ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4இ411 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,379 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையங்களுக்கு 3,032 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த 4,411 முறைப்பாடுகளில் 3,828 முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.