ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று (18) காலை தேர்தல் ஆணைக்குழு வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையே இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.
சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு (ANFRAL) மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.