Tuesday, January 7, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசம்மாந்துறையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

சம்மாந்துறையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 28 வயதுடைய பக்கீர் முகையதீன் றோஜான் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 10.45 மணி அளவில் குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதுடன்,ரிப்பிட்டர் ரக துப்பாக்கியே இதன்போது பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்தள்ளது.

சம்பவம் தொடர்பில் தம்பி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் என கூறப்படும் சந்தேக நபரான சகோதரரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles