அனுராதபுரம் – கண்டி பிரதான வீதியில் கல்குளம, மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் இன்று (16) காலை வாகன விபத்து ஏற்பட்டுள்ளது.
சிறிய ரக வேன் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும், வேனின் சாரதியும் பலத்த காயங்களுக்குள்ளாகி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.