Sunday, April 20, 2025
27 C
Colombo
செய்திகள்உலகம்வரதட்சணைக்காக மனைவிக்கு எமனான கணவன்

வரதட்சணைக்காக மனைவிக்கு எமனான கணவன்

வரதட்சணை தகராறு காரணமாக ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மனைவியிடம் டிவிஎஸ் அப்பாச்சி மோட்டார் சைக்கிள் மற்றும் 30 இலட்சம் ரூபாவை வரதட்சணையாக கேட்டுள்ளதுடன், அவை கிடைக்காததால் மனைவியை அவர் கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுந்தர் எனப்படும் சந்தேக நபர் சில காலத்திற்கு முன்பு மீனாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் வரதட்சணை கேட்டு அவரை துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற மீனாவை, அவரது கணவர் நேற்று (15) மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வரதட்சணை தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது கணவர் அவரை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

குறித்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை தேடி பொலிஸார் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles