மியான்மாரில் யாகி புயலால் பலியானோர் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், 64 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், யாகி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், மியான்மரில் உள்ள மூன்று இலட்சத்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.