Thursday, October 9, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்ட்ரம்பை கொல்ல மீண்டும் முயற்சி

ட்ரம்பை கொல்ல மீண்டும் முயற்சி

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச கோல்ப் கிளப்பில் நேற்று டொனால்ட் ட்ரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் அண்மையில் நடந்த பேரணியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்றபோது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் நேற்றைய தினம் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

திடீரென அவருடைய பார்வைக்கு உட்பட்ட தொலைவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், அவர் பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles