உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 30 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேற்படி 30 பேரும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு பயணம் மேற்கொண்ட போது தவாகாட்-தானாக்பூர் நெடுஞ்சாலைக்கு அருகில் வைத்துத் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் மலைப்பகுதியிலிருந்து கீழே வரமுடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து மண்சரிவினால் சிக்கித் தவித்த 30 பேரும் உலங்கு வானூர்தி மூலம் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.