Tuesday, January 20, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை செல்லும் அமெரிக்க பிரஜைகளுக்கான எச்சரிக்கை

இலங்கை செல்லும் அமெரிக்க பிரஜைகளுக்கான எச்சரிக்கை

ஜனாதிபதித் தேர்தலைக் கருத்திற் கொண்டு இலங்கைக்குச் செல்லும் அமெரிக்கப் பிரஜைகளை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கான தமது புதிய பயண ஆலோசனையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியிலும், அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனவும் அந்த ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கலைப்பதற்கு காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை நடத்தக்கூடும்.

ஆகையால் அமெரிக்கப் பிரஜைகள் எச்சரிக்கையாகச் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles