ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அடுத்த IMF மீளாய்வானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து சர்வதேச நாணய நிதியம் அடுத்த கட்ட மீளாய்வு பணியினை முன்னெடுத்துச் செல்ல தயார் என தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெறுபவர்களை மக்களே தீர்மானிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.