Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'வெலே சுதா'வின் சிறையில் இருந்து கைப்பேசி மீட்பு

‘வெலே சுதா’வின் சிறையில் இருந்து கைப்பேசி மீட்பு

பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட அவசர சோதனையின் போது வெலே சுதாவின் சிறையில் இருந்து நவீன கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படை பூஸ்ஸ சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (12) பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் சி பிரிவின் விசேட பிரிவின் 38ஆம் இலக்க சிறையில் அவசர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

‘வெலே சுதா’ எனப்படும் சமந்தகுமார அடைக்கப்பட்டுள்ள ‘சி’ பிரிவு செல் 38ல் சோதனை நடத்தியபோது, ​​சிம் இல்லாத கைப்பேசி கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கைப்பேசி சிறைச்சாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles