கலஹா நகரில் இன்று அதிகாலை முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மூவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலஹா பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருகோணமலைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட நண்பர்கள் குழுவொன்று பயணித்த முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.