யாழ்ப்பாணம் – இணுவில் பிரதேசத்தில் 54 வயதுடைய தந்தையொருவர் தனது 23 வயது மகளை நான்கு மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.
அவர் முதலில் மகளை மிரட்டி பலவந்தமாக பலாத்காரம் செய்ததாகவும், அதன் பின்னர் நீண்ட நாட்களாக குறித்த நபர் தனது மகளுடன் கணவன் மனைவியாக இரகசியமாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த யுவதிக்கு திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்ற போது அவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்ததாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
இதன்போது அவர் அனைத்து விபரங்களையும் வைத்தியர்களிடம் தெரிவித்ததையடுத்து வைத்தியர்கள் இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் குறித்த யுவதி முழுமையான மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் தந்தையை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு சுன்னாகம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.