இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு சாவடியின் ஊடாக பதுங்கியிருந்து விமான நிலைய முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்திற்குள் நுழைய முற்பட்ட இளைஞன் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் புனித ஜோசப் தெருவைச் சேர்ந்த மொஹமட் பௌமி மொஹமட் நசீர் என்ற 23 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இரண்டு முறை வெளிநாடு சென்றுள்ளதாகவும், கடைசியாக இந்தியாவில் சென்னையில் தனது தந்தையுடன் வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள சோதனைச் சாவடியினூடாக பதுங்கி, விமான நிலையத்தின் விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இன்று அதிகாலை 03.45 மணியளவில் இந்தியாவின் சென்னைக்கு புறப்படவிருந்த 6E-1172 என்ற IndiGo விமானத்தில் ஏற முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்போது, அவர் ஸ்ரீலங்கன் விமான சேவையின் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த இளைஞனின் சகோதரன் ஒருவரை பொலிஸாருக்கு அழைக்கப்பட்ட விசாரணைகளின் போது அவர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்த நோய்க்கு தேவையான மருந்தை அவர் உட்கொள்ளவில்லை என இளைஞனின் சகோதரர் மேலும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில்
Kன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.