Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து - முச்சக்கர வண்டி விபத்து: பெண்ணொருவர் பலி

பேருந்து – முச்சக்கர வண்டி விபத்து: பெண்ணொருவர் பலி

பாதுக்க லியான்வல வீதியில் துத்திரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டிக்கு பின்னால் பேருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் பெண் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில், பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த பயணித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பேருந்தின் சாரதியும் காயமடைந்து பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles