Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனி விவகாரம்: உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சீனி விவகாரம்: உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 1இ590 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று (12) எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் இன்று முதல் 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இன்று முதல் நான்கு வாரங்களுக்குள் திருத்தப்பட்ட பிரதிவாதிகள் பட்டியலை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், மனுவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles