இலங்கை கிரிக்கெட் அணி இன்று (12) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அவர்கள் இன்று பிற்பகல் 02.05 மணியளவில் இங்கிலாந்தின் லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தில் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
10 வருடங்களின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.