Thursday, March 13, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு51 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

51 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகுதி சிகரெட்டுகளை இலங்கைக்கு கடத்தி இரகசியமாக விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற ஒருவர் இன்று (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

51 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான இந்த சிகரெட் கையிருப்பை விமான நிலையத்திற்கு வெளியே ஹரித மாவத்தை வழியாக கொண்டு செல்ல முற்பட்ட போதே குறித்த நபர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு பிரதேசத்தை வசிப்பிடமாகவும், விமானம் மூலம் தனது வர்த்தகத்தை நடத்துபவர் எனவும் எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இவர் டுபாயில் இருந்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவரைக் கைது செய்து சோதனையிட்டபோது, ​​அவரது பயணப்பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 34,400 ‘பிளாட்டினம்’ மற்றும் ‘மான்செஸ்டர்’ ரக சிகரெட்டுகள் அடங்கிய 172 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles