5 இராஜாங்க அமைச்சர்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க, ஷஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஆகியோரே இவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.