கைப்பேசிக்குள் மறைத்து வைத்து ஐஸ் கடத்திய ஒருவர் உட்பட நான்கு பேர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனமல்வில தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகளால் தனமல்வில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது கைப்பேசிக்குள் இரகசிய பெட்டியை அமைத்து அதில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மேலும் மூவர் கைது செய்யப்பட்டதாக தனமல்வில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 7 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின், 510 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 410 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 480 மில்லிகிராம் ஐஸ் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.