இன்றைய தினம் நடைபெற்ற வேதன நிர்ணய சபையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதன தொகை 1350 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1700 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
1350 ரூபா என்ற தொகைக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய பிரதான தொழிற்சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.
அதன்படி 1350 ரூபாய் நாளாந்த அடிப்படை வேதனம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதன் வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியிடப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வேதனத்துக்கு மேலதிகமாக 350 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பாக இம்முறையும் இணக்கம் காணப்படவில்லை.