முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் உர பைக்குள் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் குறித்த சிசுவின் சடலம் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹென்ஃபோல்ட் தோட்டத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதுள்ளதுடன், அதன்போது மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது முச்சக்கர வண்டியின் பின்பகுதியில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியின் சாரதி அதே தோட்டத்தை சேர்ந்தவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிசுவின் சடலம் தொடர்பில் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் உண்மைகள் அறிவிக்கப்பட்டு நீதவானின் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.