பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் மதுஷான் சந்திரஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பு, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போதே அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.