Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏற்றுமதியாளர்களுக்கு மத்திய வங்கி வழங்கும் சலுகை

ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய வங்கி வழங்கும் சலுகை

பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு தமது ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு வழங்கப்பட்ட கால எல்லையை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியுள்ளது.

மேக்ரோ பொருளாதார அபிவிருத்திகளை, குறிப்பாக உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தை நிலவரங்களின் அபிவிருத்திகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஊடாக, ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாயாக மாற்றுவதற்கான கால எல்லையை கணிசமாக தளர்த்திய இலங்கை மத்திய வங்கி “2024 ஆம் ஆண்டு இல. 01 இலங்கைக்கு ஏற்றுமதி வருவாயைக் கொண்டுவருவதற்கான விதிகளை” வெளியிட்டது.

இந்த அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்குப் பயன்படுத்திய பின்னர், பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் தங்கள் ஏற்றுமதி வருமானத்தை கட்டாயமாக இலங்கை ரூபாயாக மாற்றுவதற்குப் பொருந்தும் காலம், ஏற்றுமதி வருமானம் கிடைத்த நாளிலிருந்து மூன்று (03) மாதங்கள் முடிந்த பின்னர் பத்தாவது நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முந்தைய விதிகளின்படி, ஏற்றுமதி வருமானம் பெறப்பட்ட திகதியைத் தொடர்ந்து மாதத்தின் ஏழாவது நாளில் சம்பந்தப்பட்ட நிலுவைகள் கட்டாயமாக இலங்கை ரூபாயாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

இந்த விதிகளை அந்நிய செலாவணி திணைக்களத்தின் இணையத்தளத்தில் (www.dfe.lk) பார்வையிட முடியும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles