Thursday, August 7, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாவது நாளாக இன்று

தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாவது நாளாக இன்று

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மூன்றாவது நாளாக இன்று இடம்பெறவுள்ளது.

இன்றையதினம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், பொலிஸ் நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவுகள் என்பனவற்றிலும் தபால் மூல வாக்குகளைப் பதிவு செய்ய முடியும்.

இதுதவிர, முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை தபால் மூலம் வாக்களிப்பு நடைபெறும் என்பதால், அதற்கான வசதிகளை பணியிடங்களில் ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles