Saturday, January 17, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இபலோகம பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக கல்நெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இபலோகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 42 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கான்ஸ்டபிள் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கல்நெவ பொலிஸ் உத்தியோகத்தர் குழுவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சந்தேகநபரான கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டு விசாரணையில், அவர் சில இடங்களில் வட்ஸ்அப் ஊடாக போதைப்பொருள் கொள்வனவு செய்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles