சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தில் தொலைபேசி இணைப்பக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த நிர்மலா என்ற பெண் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இவர் உள்நாட்டு முனையம் பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு நேற்றிரவு (05) பணிக்குச் சென்றுள்ளார்.
இன்று காலை மற்றொரு பெண் அதிகாரி பணிக்குச் சென்ற போது, நிர்மலா உயிரிழந்தமை தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நிர்மலா மன அழுத்தத்திலிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.