தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (05) காலை கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பின்னதுவ மற்றும் இமதுவ அணுகு வீதிகளுக்கு இடையில் 95.8 கிலோமீற்றர் தூரத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பாதை தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.