ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இரண்டாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சத்து 12 ஆயிரத்து 319 அரச பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று ஆரம்பமான தபால் மூல வாக்களிப்பு நாளை வரையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.