ஜோர்ஜியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பரோ கவுண்டியின் விண்டரில் உள்ள அபலாச்சி உயர்நிலைப் பள்ளியில் நேற்று இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஜோர்ஜியா புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டை 14 வயது சிறுவன் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.