சீதுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (04) மதியம் 01.45 மணியளவில் சீதுவ பேஸ் லைன் வீதியில் இலக்கம் 5 மெரினா மாவத்தையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
43 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது முகத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் வர்த்தக வலயத்துக்குட்பட்ட மேன்பவர் நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றவாளியை தேடி சீதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.