Saturday, September 7, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇருவரின் உயிரைப் பறித்த கோர விபத்து

இருவரின் உயிரைப் பறித்த கோர விபத்து

எப்பாவல – கெக்கிராவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளது.

எப்பாவல – கெக்கிராவ வீதியில் கடியாவ சந்திக்கு அண்மித்த வளைவுக்கு அருகில் நேற்று (04) பிற்பகல் பொலிஸ் சார்ஜன்ட் ஓட்டிச் சென்ற வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதுடன் குழந்தை பலத்த காயங்களுடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

மகுலேவ போகஸ்வெவ பிரதேசத்தில் வசித்த 58 மற்றும் 38 வயதான இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

எப்பாவளையில் இருந்து கெக்கிராவ நோக்கி சார்ஜன்ட் ஓட்டிச் சென்ற வேன், கெக்கிராவ பகுதியிலிருந்து எப்பாவல நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த மகளின் கணவர் கடற்படையைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் சார்ஜன்ட் தூங்கியதால் வேன் வீதியை விட்டு விலகி முன்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.18 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 303.39...

Keep exploring...

Related Articles