வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (03) தங்கொடுவ பொலிஸ் பிரிவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது பிரேசிலில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
தங்கொட்டுவ, யோகியான பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.