இலங்கையின் மீன்பிடித் துறைக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள மூலோபாய கட்டமைப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மீன்பிடித் தொழில்துறையினை ஒரு முக்கிய பொருளாதார உந்துதலாக நிலைநிறுத்தும் வகையில் ஜனாதிபதி மற்றும் மீன்பிடி அமைச்சரினால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த திட்டத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் மீன்பிடித் துறையானது ஏற்றுமதி வருவாயில் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது