Friday, February 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபடகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் மாயம்

படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் மாயம்

மாதகலில் இருந்து இன்று அதிகாலை கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இரண்டு இளைஞர்கள் இவ்வாறு கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த வேளை அருகே வந்த படகின் உதவியுடன் அவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், மற்றைய இளைஞர் காணாமல் போயுள்ளார்.

அவரை தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles