Friday, May 9, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாட்டு யானை தாக்கி ஒருவர் பலி

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

வயலைப் பாதுகாக்கச் சென்ற நபர் யானைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

மொரகஹகந்த, நிக்கபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காட்டு யானைகள் கூட்டம் வயலுக்கு வந்து அங்கிருந்த பயிர்களை முற்றாக சேதப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வஸ்கமுவ தேசிய பூங்காவில் இருந்து வரும் காட்டு யானைகள் பல வருடங்களாக இந்த கிராமங்களை தாக்கி வருகின்றன.

இதற்கு முன்னரும் இதே கிராமத்தில் காட்டு யானை தாக்கி சுமார் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பக்கமூன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles