தெமட்டகொட சமிந்தவின் மகன் ‘மலீஷ’வுடன் நெருங்கிய தொடர்பை பேணி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் நேற்று (03) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்hர்.
இதன்போது 13 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இலத்திரனியல் தராசு போன்றன கைப்பற்றப்பட்டுள்ளன.
அங்கொட, கொதட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கொத்தடுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ‘தெமட்டகொட சமிந்த’வின் மகன் மலீஷ ஆகாஷுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், போதைப்பொருள் கடத்தல்களை மேற்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.