60,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு வருமான வரி பரிசோதகர்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பிரதேச சபையின் அனுமதியின்றி காணியொன்றில் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும் அதனை உடைத்து அகற்றாமல் இருப்பதற்கும் இந்த தொகை கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதற்காக முதலில் 350,000 ரூபா பணம் கோரப்பட்டதாகவும், பின்னர் அது 1 இலட்சமாக குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 60,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி பிரதேசத்தில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் படி, கரைச்சி பிரதேச சபையின் இரண்டு வருவான வரி பரிசோதகர்கள் குறித்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக பணத்தை பெற்றுக்கொண்ட போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.