Saturday, August 2, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

6.61 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 59 வயதுடைய நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு, கல்கிஸ்ஸ படோவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​6.61 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து, சட்டமா அதிபர், கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

நீண்ட விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles