ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று (03) முதல் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
அதன்படி 25 மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களினூடாக வாக்காளர் அட்டைகளை தபால் மூலம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 8,000 பேரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.