பதுளை – மஹியங்கனை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று பேருந்துடன் மோதியதில் நேற்று (02) பிற்பகல் விபத்து ஏற்பட்டுள்ளது.
பதுளை பொது வைத்தியசாலையில் உள்ள கிளினிக்கிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய குழுவினரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
பதுளை – மஹியங்கனை வீதியின் முன்னால் வந்த பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மருமகள் ஆகியோர் படுகாயமடைந்து மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அளுத்கெல்ல, மீகஹகிவுல, கரந்தகஹமட பகுதியைச் சேர்ந்த 73, 67 மற்றும் 43 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓடிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியின் முன் டயர் கழன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி, முன்னால் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் கந்தகெட்டிய மற்றும் பதுளை பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.