Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோலி கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயன்ற நபர் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயன்ற நபர் கைது

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஒருவரை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவினர் நேற்று (02) இரவு கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 06.50 மணிக்கு தோஹா நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-217 இல் செல்வதற்காக அவர் வணிக வகுப்பு வசதிகளுடன் கூடிய சிறப்பு முனையத்திற்கு வந்துள்ளார்.

இவரின் கடவுச்சீட்டை பரிசோதித்த போது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவர் முனையத்தில் இருந்து எல்லை கட்டுப்பாட்டு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பணிபுரியும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக விமான நிலையத்தில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதிகாரிகள் மேற்கொண்ட தொழில்நுட்ப சோதனையின் போது, குறித்த நபரின் புகைப்படத்துடனான போலியான கடவுச்சீட்டில் வேறு ஒருவரின் விபரங்கள் அடங்கியிருந்துள்ளமை தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்பிறகு, அவரது பயணப்பை சோதனை செய்த போது, மற்றொரு போலி இத்தாலிய கடவுச்சீட்டு மற்றும் போலியான தகவல்களுடன் கூடிய பிரான்ஸ் குடியிருப்பு விசாவையும் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த விசாவில் அவர் இதற்கு முன்னர் பிரான்ஸில் வசித்து வந்த தகவல் உள்ளடங்கிய போதிலும்இ அவர் இதற்கு முன்னர் பிரான்ஸுக்கு சென்றதில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles