Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொள்கலன் லொறியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்

கொள்கலன் லொறியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்

கொழும்பு துறைமுகத்தில் உள்ள UTC வளாகத்துக்கு வந்த கொள்கலன் லொறியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்கலன் லொறியில் உதவியாளராக பணியாற்றிய 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் கடந்த சனிக்கிழமை தனது சகோதரருடன் பொருட்களை விடுவிப்பதற்காக வந்து மற்ற கொள்கலன் வாகனங்களுடன் அவர்களது வாகனத்தையும் நிறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், ஏனைய கொள்கலன் லொறிகள் அவ்விடத்தை வெளியேறினாலும், குறித்த லொறி அவ்விடத்திலேயே இருந்துள்ளது.

இதனால் அதிகாரிகள் குறித்த கொள்கலன் லொறியை சோதனை செய்த போது மேற்படி நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பொலிஸ் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles