தலவாக்கலையில் இருந்து ஹட்டன் கொட்டகலை நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த லொறி சாரதி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (02) மாலை 7 மணியளவில் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பிராந்திய வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
லொறியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்தது.
விபத்து இடம்பெற்றதுடன், லொறியின் சாரதி மயக்கமடைந்த நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் குழு மற்றும் திம்புல்ல பத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து பெரும் பிரயத்தனத்தின் பின்னர் சாரதியை காப்பாற்றியுள்ளனர்.