கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதில் நிலவும் பிரச்சினைகள் விரைவில் தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஒருபோதும் கைவிடப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிபுணத்துவ மன்றத்துக்காக நடைபெற்ற “ஆஸ்க் மி – எனிதிங்க்” விசேட நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.